மேலும் செய்திகள்
பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்
06-May-2025
திண்டிவனம்: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திண்டிவனத்தில் பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடந்தது. இந்திராகாந்தி பஸ் நிலையத்தில் புறப்பட்ட ஊர்வலம் நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி வழியாக சென்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெங்கடேசபெருமாள் முன்னிலை வகித்தார். மண்டல் தலைவர்கள் காளியம்மாள், சுந்தர், கதிரவன், யுவராஜ், பொதுசெயலாளர்கள் பாண்டியன், அன்பழகன், ராஜசேகர், மாவட்ட பொருளாளர் பிரேம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், வர்த்தகர் அணி ஜின்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
06-May-2025