பா.ஜ., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து விழுப்புரம் நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிரணி தலைவர் யமுனாராணி தலைமை தாங்கினார். தலைவர் செல்வி வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் விநாயகம், தர்மராஜ், முன்னாள் தலைவர் கலிவரதன் கண்டன உரையாற்றினர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க., அரசை கண்டித்து பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சரண்யா, தியாகராஜன், பொதுச் செயலாளர் பார்த்தீபன், பொருளாளர் முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.