மேலும் செய்திகள்
பா.ஜ., நகர தலைவர் நியமனம்
22-Mar-2025
திண்டிவனம், ;திண்டிவனம் வந்த பா.ஜ., மாநில தலைவருக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பா.ஜ., மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் போது, நேற்று மாலை 3.00 மணிக்கு, திண்டிவனம் வந்தார். அவருக்கு சென்னை சாலை, சலவாதி கூட்ரோடு அருகே விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பிற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினர். ஸ்ரீராம் பள்ளி தாளாளர் முரளிரகுராமன், மாநில செயலாளர் கோபிநாத், மாவட்ட பொது செயலாளர்கள் எத்திராஜி, பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் செந்தில், வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் ஜின்ராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் வினோத்குமார், திண்டிவனம் நகர தலைவர் வெங்கடேசபெருமாள், தலைமை நிலைய பேச்சாளர் பிரேம், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் ராஜா, நாட்டார் மங்கலம் சிவசண்முகம், ஒய்வு பெற்ற ராணுவவீரர் வசந்தகுமார், மொளசூர் புருஷோத்தமன், மரக்காணம் மண்டல தலைவர்கள் காளியம்மாள், கதிரவன், நடுக்குப்பம் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முருகன், மகளிர் அணி ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவருடன், மாநில பா.ஜ., துணை தலைவர் சம்பத், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.
22-Mar-2025