காதலியை கரம் பிடிக்க மறுத்த காதலன் கைது
செஞ்சி; திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம்பெண்ணை கருவை கலைக்க செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே குரும்பன் கோட்டையை சேர்ந்தவர் பூவரசன், 20; இவர், டிப்ளமோ நர்சிங் படித்துள்ள 23 வயதுடைய இளம்பெண்மை ஓராண்டாக காதலித்துள்ளார். இருவரும் நெருங்கி பழகியதால் இளம்பெண் கர்ப்பமானார். இந்நிலையில், கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக பூவரசன் கூறியுள்ளார். அதைநம்பி, இளம்பெண் கருவை கலைத்ததும், திருமணம் செய்து கொள்ள பூவரசன் மறுத்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பூவாசனை கைது செய்தனர்.