தீக்காயமடைந்த பெண் சாவு
விழுப்புரம் : காஸ் சிலிண்டர் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். விழுப்புரம் அடுத்த கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மனைவி சவுதாரா, 45; இவர், கடந்த 23ம் தேதி வீட்டில் காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவையில் தீ பற்றியதில், சவுதாரா படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று அதிகாலை இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.