உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிலாளியை தற்கொலைக்கு துாண்டிய பஸ் டிரைவர் கைது

தொழிலாளியை தற்கொலைக்கு துாண்டிய பஸ் டிரைவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தொழிலாளியை தற்கொலைக்கு துாண்டிய அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த சேர்ந்தனுாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45; கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர், 52; அரசு பஸ் டிரைவர். இவரிடம் கடந்த 2017ம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் ஆறுமுகம் கடன் வாங்கியிருந்தார்.இதற்காக ஆறுமுகம், தனது 39 சென்ட் நிலத்தை பன்னீருக்கு கிரையமாக எழுதிக் கொடுத்துள்ளார். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வட்டி பணமாகவும் கொடுத்துள்ளார்.கடந்த மாதம் 27ம் தேதி ஆறுமுகம், பன்னீரிடம் சென்று அசல் பணத்தைக் கொடுத்து, தனது நிலத்தைத் தரும்படி கேட்டார். அதற்கு பன்னீர் தர மறுத்து, ஆறுமுகத்தை திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம், 2 நாட்களுக்கு முன் விஷம் குடித்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் இறந்தார்.அவரது மனைவி ராணி, அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் பன்னீர் மீது, தற்கொலைக்கு துாண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ