மேலும் செய்திகள்
ஆம்னி பஸ்கள் கோயம்பேடில் இருந்தே இயங்கும்!
09-Dec-2024
திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஆம்னி பஸ் பின்னால் வேன் மோதிய விபத்தில் பக்தர்கள் 7 பேர் காய மடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, உத்தண்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்றுவிட்டு, வேனில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் காலை 5.45 மணிக்கு திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்ரோட்டை கடந்த போது, முன்னால் சென்ற ஆம்னி பஸ் திடீரென பிரேக் போட்டதால், வேன் பஸ் மீது மோதியது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த கோமதி, 45; அமுதா, 58; அருள், 70; ஜெயக்கொடி, 43; சேகர், 48; நாகவள்ளி, 16; சுமதி, 19; ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Dec-2024