உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி கடைகளில் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி கடைகளில் கூட்டம்

விழுப்புரம்: தீபாவளியை யொட்டி, விழுப்புரத்தில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் உள்ள ஆடு, கோழி போன்ற இறைச்சி கடைகளில் நேற்று அதிகாலை 4.00 மணி முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆட்டு கறி கிலோ ரூ.1000 த்திற்கும், கோழிக்கறி கிலோ ரூ.250 முதல் 300 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை 5.00 மணிக்கு மேல் அமாவாசை பிறப்பதையொட்டி, பொதுமக்கள் பலரும் இறைச்சி கடைகளில் விடியற்காலை முதலே கூடினர். இதனால், இறைச்சி கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வாங்கி சென்றனர். டாஸ்மாக் விற்பனையும் அமோகம் :தீபாவளி பண்டிகையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் மாலை முதல் டாஸ்மாக் விற்பனை சுடுபிடிக்க துவங்கியது. டாஸ்மாக் கடைகளில் இறைச்சி கடைகளை போலவே, குடிமகன்கள் மதுபானங்களை வாங்குவதற்காக கூட்டத்தில் திண்டாடி வாங்கி சென்றனர். இங்கும், பண்டிகை தினத்தில் கூட்டம் குறைவின்றி காணப்பட்டதால் டாஸ்மாக் விற்பனையும் வழக்கத்தை விட இரு மடங்கு கல்லா கட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை