கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சி; சேர்க்கைக்கு அழைப்பு
விழுப்புரம்; விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இந்த ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற உள்ளது.மத்திய கூட்டுறவு வங்கி விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி செய்திக்குறிப்பு:விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2025-26ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சி காலம் ஓராண்டாகும். இந்த பயிற்சி இரண்டு பருவ முறைகள் கொண்டது.பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயபடிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜூலை 1ம் தேதியன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பில்லை. கடந்த மே 15ம் தேதி முதல் வரும் 20ம் தேதி மாலை 5:00 மணி வரை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளம் www.tncu.tn.gov.inமூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான தேர்வை தமிழில் மட்டுமே எழுத வேண்டும். விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் இணையவழி மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.பயிற்சிக்கான கட்டணம் 20 ஆயிரத்து 750 ரூபாய் ஒரே தவணையில் இணையவழி மூலமே மேலாண்மை நிலையத்திற்கு நேரில் பயிற்சியில் சேரும்போது செலுத்த வேண்டும்.மேலும்,விபரங்கள் பெற விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.2/1006, எல்லீஸ்சத்திரம் சாலை, திருச்சி நெடுஞ்சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் 605401 என்ற முகவரியிலும், முதல்வரின் மொபைல் 94425 63330 தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி 04142 222619 எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.