உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தகவல் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தகவல் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம்; மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் கூடுதலாக ஒதுக்கீடு செய்த ஒரு தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கணினி அறிவியல், தகவல் தொழில்நட்பம், கணினி பயன்பாடு ஆகியவற்றில் இளங்கலை பட்டமும், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான அறிக்கை தயாரித்தல், அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் அல்லது திட்டத்தில் பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும். இந்த தகுதிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொகுப்பூதியம் மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை அறை எண். 26, மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், விழுப்புரத்தில் பெறலாம் அல்லது மாவட்ட இணையதளத்தில் (https://viluppuram.nic.in) பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, பெற்ற அலுவலகத்திலேயே வரும் 22ம் தேதி மாலை 5:45 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை