மேலும் செய்திகள்
பட்டப்பகலில் மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
14-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டைச் சேர்ந்தவர் மதுரைவீரன் மகன் ஆகாஷ், 25; இவரது உறவினர் கிஷோர், 19; இவர், ஆகாஷ் வீட்டில் சில தினங்களாக தங்கியிருந்தார். கடந்த 9ம் தேதி கிஷோர் பைக்கில் மாம்பழப்பட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது, ஆகாஷ் குடும்பத்தினரிடம் இருந்த முன்விரோதம் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் கார்மேகம், 25; உள்ளிட்ட குடும்பத்தினர் சேர்ந்து, கிஷோரை வழி மறித்து தாக்கினர். தகவல் அறிந்து தடுக்க வந்த ஆகாஷ், அவரது தாயார் எழிலரசி ஆகியோரையும், கார்மேகம் குடும்பத்தினர் தாக்கினர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், கார்மேகம், 25; சிவபாலன், 33; சபா, 23; சதீஷ், 34; ஆகாஷ், 25; மதுரைவீரன், 45; ஸ்டாலின், 25; எழிலரசி, 43; உட்பட 12 பேர் மீது வழக்கு பதிந்து, காணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14-Oct-2025