மேலும் செய்திகள்
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை
26-Apr-2025
செஞ்சி : செஞ்சி அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.செஞ்சி அடுத்த குஞ்சிப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் லோகநாதன் மனைவி அபிராமி என்கிற சிவசங்கரி, 21; இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிவசங்கரி தனது கையில் கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து சிவசங்கரியின் தந்தை திருமலை, செஞ்சி போலீசில் அளித்த புகாரில், தனது மகளிடம், லோகநாதனின் தாயார் குப்பு, 50; சகோதரிகள் விஜயலட்சுமி, 25; மகாலட்சுமி, 23; ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் கையில் கத்தியால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மேலும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அபிராமி என்கிற சிவசங்கரியிடம் புதுச்சேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.5 மாஜிஸ்திரேட் செல்வநாராயண பெருமாள், வாக்குமூலம் பெற்றார்.திருமணமான இரண்டே மாதத்தில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26-Apr-2025