உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புலவனுாரை சேர்ந்தவர் குமார் மகன் வசந்தகுமார், 22; கூலி தொழிலாளி. இவருக்கும், விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தை சேர்ந்த தங்கபாண்டியன், 26; என்பவருக்கும், ஒரு மாதம் முன் புலவனுார் ஓட்டலில் சாப்பிடும்போது தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக, ஏ.கே., குச்சிப்பாளையத்தில் சமையல் கூலி வேலைக்கு வந்த வசந்தகுமாரிடம், தங்கபாண்டியன் மற்றும் ராஜேஷ் உட்பட 4 பேர் சேர்ந்து தகராறு செய்து அவரை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். வளவனுார் போலீசார், தங்கபாண்டியன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி