மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...விழுப்புரம்
16-Sep-2025
வானூர்:முதியவர்களை தாக்கிய தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வானுார் அடுத்த சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 65; இவர் தனது வீட்டின் அருகில், சிறிய கோவில் அமைத்து, குறி சொல்லி வருகிறார். நேற்று முன்தினம் இரவு குறி கேட்க வந்தவர்கள், அவர் வீட்டின் எதிரே பைக்குகளை சாலையில் நிறுத்தினர். அப்போது, அந்த வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, 57; சாலையில் ஏன் வாகனங்களை நிறுத்துகிறீர்கள் என கேட்டார். அப்போது, கிருஷ்ணமூர்த்தி வந்து, குறுக்கிட்டு பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, அவரது மனைவி புஷ்பா, 50; மகன்கள் பிரகாஷ், 30; சிவகுமார், 28; ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி ஜெயந்தி, 60 ஆகியோரை தாக்கினர். வானுார் போலீசார் நால்வர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
16-Sep-2025