மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற பெண் கைது
13-Apr-2025
வானுார் வானுார் அருகே சாலையில் ஒரே பைக்கில் அமர்ந்து சாகசத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மயிலம் அடுத்த ரெட்டணை குளக்கரை தெருவைச் சேர்ந்தவர்கள் கோபி மகன் ஷாம், 23; செல்வராஜ் மகன் சிவா, 30; இடையஞ்சாவடி குதிரைப்பண்ணை ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் வினோத், 24; கன்னியப்பன் மகன் சூர்யா, 24; 4 பேரும் நேற்று முன்தினம், ஒரே பைக்கில் சென்றனர். பைக்கை சிவா ஓட்டினார்.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து மயிலம் ரோட்டில் ஒரே பைக்கில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றனர்.அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆரோவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், பைக்கை பறிமுதல் செய்ததுடன், 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தார்.
13-Apr-2025