உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவிழாவில் தகராறு 4 பேர் மீது வழக்கு 

திருவிழாவில் தகராறு 4 பேர் மீது வழக்கு 

வானுார்: கோட்டக்குப்பம் அருகே பாட்டு கச்சேரியின் போது, ஏற்பட்ட தகராறில் 4 பேரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு திருவிழாவில் பாட்டு கச்சேரி நடந்தது. அப்போது அங்கு வந்த மீனவர் பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் செல்வா என்பவருக்கும், ஊர் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 31; திருவேங்கடம் மனைவி திருல்லைநாயகி, அவரது மகன் அய்யனார், கோதண்டபாணி மகன் குமார் ஆகியோரை, செல்வா மற்றும் அவருடன் வந்த சிலர், தாக்கி மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து சுப்ரமணி, அளித்த புகாரின் பேரில், செல்வா, குணரேசன், திருகுமாரன், சர்வின் ஆகிய 4 பேர் மீது கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை