உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அனுமதியின்றி கூட்டம் 48 பேர் மீது வழக்கு

 அனுமதியின்றி கூட்டம் 48 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில், அனுமதியின்றி கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 48 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூரணசந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கண்ணீர் அஞ்சலி கூட்டம் விழுப்புரத்தில் நேற்று இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே அனுமதியின்றி கண்ணீர் அஞ்சலி செலுத்த இந்து முன்னணி சார்பில் கூட்டம் நடந்தது. இதையடுத்து, மாவட்ட தலைவர் வெங்கடேசன் உட்பட 10 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர். இதே போல், அரசூர் கூட்ரோட்டில் மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் 12 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்தனர். செஞ்சியில் அஞ்சலி கூட்டம் நடத்திய இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராமு உட்பட 26 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை