உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பஞ்சாயத்து தலைவர் மனைவி தாக்கு 5 பேர் மீது வழக்கு

 பஞ்சாயத்து தலைவர் மனைவி தாக்கு 5 பேர் மீது வழக்கு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிராண்டிபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் அன்பழகன், 59; இருளர் வகுப்பை சேர்ந்தவர். இந்த கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பஞ்சாயத்து கட்டடம் கட்டுவதற்கு, அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் திருஞானசம்பந்தம், 75; எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இ ருந்து வந்தது. இந்நிலையில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் நேற்று காலை கைகலப்பு ஏற்பட்டது. இதில் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் மனைவி விஜயா, 49; தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அன்பழகன் வெள்ளிமேடுப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் திருஞானசம்பந்தம் மகன் மகேஷ்பாபு , 40; திருஞானசம்பந்தம், 75; ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின் றனர். இதே போல் வழக்கறிஞர் மகேஷ்பாபு கொடுத்துள்ள புகாரின் பேரில், பஞ்சாயத்து தலைவர் அன்பழகன், இவரது மனைவி விஜயா, மகன் சரத்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ