உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாடு கட்டுவதில் தகராறு அண்ணன், தங்கை மீது வழக்கு

மாடு கட்டுவதில் தகராறு அண்ணன், தங்கை மீது வழக்கு

செஞ்சி : மாடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தங்கை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.செஞ்சி அடுத்த கொம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சகாயநாதன், 61; இவரது தங்கை மார்க்கரேட் ரீட்டா, 50; இருவருக்கும் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.நேற்று காலை 10 மணி அளவில் மார்க்கரேட் ரீட்டா தனது மாட்டை, சகாயநாதன் நிலத்தின் அருகில் கட்டினார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சகாயநாதனை, மார்க்கரெட் ரீட்டா, அவரது கணவர் பாக்கியநாதன், 55; தாக்கினர். சகாயநாதனும் திருப்பி தாக்கியுள்ளார்.இது குறித்து சகாயநாதன் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் மார்க்கரெட் ரீட்டா, பாக்கியநாதன் மீதும், மார்க்கரெட் ரீட்டா கொடுத்த புகாரின் பேரில் சகாயநாதன் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை