மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
03-Jul-2025
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பானாம்பட்டைச் சேர்ந்தவர் சிவக்குமார், 29; கூலித் தொழிலாளி. இவர், தனது உறவினரான பெருமாள் மகன் கிருஷ்ணன், 23; என்பவருடன் கடந்த 9ம் தேதி மது அருந்தினார்.அப்போது, சிவக்குமார் தனக்கு போதும் என வீட்டிற்கு கிளம்பினார். அவரை மேலும் குடிக்கும்படி வற்புறுத்திய கிருஷ்ணன், சிவக்குமாரை தாக்கி, மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், கிருஷ்ணன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
03-Jul-2025