மேலும் செய்திகள்
கடனை திருப்பி கேட்டு தாக்கியவர் மீது வழக்கு
12-Apr-2025
விழுப்புரம்: பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த சுந்தரவாண்டியைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு மனைவி மகேஸ்வரி, 43; சில மாதங்களாக, விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் தங்கியுள்ள இவரிடம் எம்.புதுாரை சேர்ந்த ராம்குமார், 45; என்பவர் 2 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். நகை மற்றும் பணத்தை திருப்பிக்கேட்ட மகேஸ்வரியை, ராம்குமார் திட்டி, தாக்கினார்.புகாரின் பேரில், ராம்குமார் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Apr-2025