மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
11-Jul-2025
கோட்டக்குப்பம்: காதணி விழாவிற்கு அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் லட்சுமிபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 43; இவர் மீது, கொலை, அடிதடி என 23 வழக்குகள் உள்ளது. இவர் மாவீரன் மஞ்சள் படையின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகன்களுக்கு நேற்று காதணி விழா நடந்தது. இதையொட்டி, அவர் கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் பிரம்மாண்ட பேனர் வைத்திருந்தார். அனுமதியின்றி பேனர் வைத்திருப்பதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, ராஜ்குமார் மீது, கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
11-Jul-2025