உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் குடிபோதையில் தாயை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் ஊரல் கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 40; கூலித் தொழிலாளி. கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால், விரக்தியில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, அவரது தாய் பவுனம்பாளை, 60; தாக்கி வந்துள்ளார். கடந்த 4ம் தேதி போதையில் வீட்டிற்கு வந்தவர், தாயை தாக்கியுள்ளார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், பாலாஜி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை