உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்திய மூவர் மீது வழக்கு

மணல் கடத்திய மூவர் மீது வழக்கு

விழுப்புரம்: மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். காணை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், அருளவாடி தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 57; சக்திவேல், 36; பச்சையப்பன், 43; ஆகியோர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. காணை போலீசார், ஆறுமுகம் உள்ளிட்ட ௩ பேர் மீது வழக்குப் பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ