உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண்ணை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த நடுமுத்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி,24; இவர், நேற்று முன்தினம் தனது தாயார் லட்சுமியுடன் சென்று, தனது வீட்டின் அருகே காலியிடத்தில், மாட்டை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ்,30; தரணி,28; ஆகியோார் அங்கு சிறுநீர் கழித்துள்ளனர்.அதனை தேன்மொழி தட்டி கேட்டபோது, நாகராஜ் உள்ளிட்ட இருவரும், அவரை திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த தேன்மொழி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேன்மொழி அளித்த புகாரின் பேரில், நாகராஜ் உள்ளிட்ட இரண்டுபேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை