உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்கு

நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்கு

விழுப்புரம்: காதலித்த பெண்ணை, நிச்சியதார்த்தம் முடிந்த பிறகு, திருமணம் செய்துகொள்ள மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருவெண்ணெய்நல்லுார் அருகே கிராமத்தை சேர்ந்த 27 வயதுடைய பெண், கோயம்புத்துாரில் தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது, தஞ்சாவூர் வலம்பாங்குடியை சேர்ந்த சூசை சவரிமுத்து மகன் ஜான்பாண்டியன், 26; என்பவரும் அங்கு வேலை செய்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, கடந்த பிப்., 10ம் தேதி, உறவினர்கள் முன்னிலையில் நிச்சியதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், ஜான்பாண்டியன் திடீரென அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், ஜான்பாண்டியன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை