ரூ.3.56 லட்சம் மோசடி: வாலிபர் மீது வழக்கு
விழுப்புரம்: ஓட்டலில் 'ஜிபே' மூலம் 3.56 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் கந்தசாமி லே அவுட்டைச் சேர்ந்தவர் பாலாஜி, 42; இவர், விழுப்புரம் நேருஜி சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் விக்கிரவாண்டி அடுத்த கயத்துாரைச் சேர்ந்த முத்துலிங்கம் மகன் அபினாஷ், 23; என்பவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் 'ஜிபே' மூலம் கடந்த 2023ம் ஆண்டு முதல் கடந்த செப்டம்பர் 4ம் தேதி வரை அபினாஷ் பணத்தை பெற்றுள்ளார். அவர் மொத்தம் 3 லட்சத்து 56 ஆயிரத்து 909 ரூபாயை தனது மொபைல் எண்ணுக்கு பெற்று மோசடி செய்திருப்ப தை பாலாஜி கண்டறிந்தார். இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின்பேரில், அபினாஷ் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.