உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

செஞ்சி : செஞ்சி அடுத்த, நல்லபிள்ளை பெற்றாள் பழைய ஊர் மாரியம்மன் கோவிலில், 30 ம் ஆண்டு சாகை வார்த்தல் நடந்தது. அதனையொட்டி, இரு தினங்களுக்கு முன், காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கன்னி குன்றில் இருந்து பூங்கரகம், திரிசூலம் ஊர்வலம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு முத்து பல்லக்கு ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ