உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவலுார்பேட்டையில் சி.சி.டி.வி., கேமராக்கள்

அவலுார்பேட்டையில் சி.சி.டி.வி., கேமராக்கள்

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில், 54 கண்காணிப்பு கேமராக்களை எஸ்.பி., சரவணன் இயக்கி வைத்தார். அவலுார்பேட்டையில் தெருக்களின் சந்திப்பு, மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், கடை வீதி உள்ளிட்ட 23 இடங்களில், 54 சி.சி.டி.வி., கேமராக்கள் அனைத்து வர்த்தக சங்கம், காவல் துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டன. எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி கேமராக்களின் செயல்பாட்டை துவக்கி வைத்தார். செஞ்சி டி.எஸ்.பி., மனோகரன் முன்னிலை வகித்தார். சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வரவேற்றார். இதில் அவலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சுனில்குமார், மேலாளர் சம்பத்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கேசவன், தனிப்பிரிவு முனுசாமி, போலீசார், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை