உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பணம் தரமறுத்த இருவரை தாக்கியவர்கள் மீது வழக்கு

பணம் தரமறுத்த இருவரை தாக்கியவர்கள் மீது வழக்கு

வானுார்: கிரிக்கெட் போட்டி நடத்த பணம் தரமறுத்த தொழிலாளர்களை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், குமரன் குடி பகுதியை சேர்ந்தவர் அனுகுமார், 33; கொத்தனார். இவர் தனது நண்பர்களுடன், கிளியனுார் அடுத்த பேராவூர் கிராமத்தில் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று (நவ.,23) பேராவூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த அங்கமுத்து மகன் குமரவேல், 33; செல்வம் மகன் பிரகாஷ், 32; ஆகிய இருவரும், அனுகுமார் வேலை செய்யும் இடத்திற்கு சென்று, தங்கள் பகுதியில் கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு நன்கொடை கேட்டனர். ஆனால் தாங்கள் கூலி வேலை செய்வதால், பணம் இல்லை எனஅனுகுமார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த குமரவேல், பிரகாஷ் ஆகிய இருவரும், ‘எங்கள் ஊரில் வேலை செய்து கொண்டு பணம் தர மறுக்கிறீர்களா’ எனக்கூறி, இரும்பு ராடால் அனுகுமார், அவரது நண்பரான தேவராஜ் மகன் ஜெஸ்டின், 45; ஆகிய இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர். அதில் பலத்த காயமடைந்த அனுகுமார், கிளியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், குமரவேல், பிரகாஷ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை