உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி சேர்மன் தந்தை மறைவு முதல்வர் இரங்கல்

மாஜி சேர்மன் தந்தை மறைவு முதல்வர் இரங்கல்

விழுப்புரம் : விழுப்புரம் நகர் மன்ற முன்னாள் சேர்மன் ஜனகராஜ் தந்தை ராஜாமணி மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ' விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., ெபாருளாளரான முன்னாள் நகர்மன்ற சேர்மன் ஜனகராஜின் தந்தை ராஜாமணி மறைந்த செய்தியால் வேதனையடைந்தேன். உணர்வூட்டி வளர்த்த அன்புத் தந்தையினை இழந்து தவிக்கும் ஜனகராஜ் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார். தி.மு.க., முதன்மை செயலாளரான அமைச்சர் நேரு, விழுப்புரத்தில் முன்னாள் சேர்மன் ஜனகராஜை சந்தித்து, ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை