உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் மருந்தகம்; கலெக்டர் ஆய்வு

முதல்வர் மருந்தகம்; கலெக்டர் ஆய்வு

விக்கிரவாண்டி; நேமூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செயல்படும் முதல்வர் மருந்தகத்தை நேற்று கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, மருந்தகம் செயல்பாடு, தினசரி விற்பனை, பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளனவா என கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.பின் அங்கு கூடிய பொதுமக்கள் நேமூர் அண்ணா நகர் பகுதியில் தனியாக பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.அதற்கு அவர், போதுமான ரேஷன் கார்டுதாரர்கள் இல்லாத காரணத்தால் அப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க இயலாது. தற்போதுள்ள ரேஷன் கடையில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். முன்னதாக கெடாரில் உள்ள மருந்தகத்தை ஆய்வு செய்தார்.தாசில்தார் யுவராஜ், நேர்முக உதவியாளர் லட்சுமிபதி, மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, கூட்டுறவு துணை பதிவாளர் சிவபழனி, துணை பதிவாளர் பயிற்சி மயூரி, சார் பதிவாளர் கனகவள்ளி, செயலாளர் குமரகுருபரன், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, வி.ஏ.ஓ., உதயகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை