தென்பசியார் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்
மயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ஆடி கிருத்திகை தினமான நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களின் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தனர். விரதம் இருந்த பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் மற்றும் பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 1:30 மணிக்கு தீ மிதித்தல், காவடி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சி நடந்தது.