உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

ரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா

செஞ்சி : செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்.சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஏ.என்.எம்., பி.பார்ம், எம்.பார்ம், டி.பார்ம், டி.எம்.எல்.டி., ஆகிய பிரிவுகளுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் ரங்க பூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். இயக்குனர்கள் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி ஆகியோர் குத்து விளக்கேற்றினர். சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ்நாடு பாடநுால் கழக உறுப்பினர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்வியின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் உயர்வுகள் குறித்தும் விளக்கினார். கல்லுாரி முதன்மை நிர்வாக அலுவலர் மணிகண்டன், பார்மசி கல்லுாரி முதல்வர் விஜயகுமார், நர்சிங் கல்லுாரி முதல்வர் டாக்டர் உதயசங்கரி மற்றும் பேராசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை