உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளி கட்டடங்கள் முதல்வர் திறந்து வைப்பு: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

அரசு பள்ளி கட்டடங்கள் முதல்வர் திறந்து வைப்பு: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை முதல்வர், தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.அதன்படி விக்கிரவாண்டி ஒன்றியம், எசலாத்தில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.21 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.கூடுதல் கலெக்டர் ஸ்ருதந் ஜெய்நாராயணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை ,துணை சேர்மன் ஜீவிதாரவி , சி.இ.ஓ., அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் அய்யாசாமி நன்றி கூறினார்.செஞ்சி ஒன்றியம் வேலந்தாங்கல் ஊராட்சி, வஸ்தளம்புரவடை கிராமத்தில் ரூ.32.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களின் கல்வெட்டை மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். விழாவில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பி.டி.ஓ., நடராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன், அன்னம்மாள், ஊராட்சி தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மயிலம் ஒன்றியம், வீடூர் கிராமப் பள்ளி கட்டட திறப்பு விழாவிற்கு ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி தமிழரசன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஒலக்கூர் ஒன்றியம், செம்பாக்கம் ஊராட்சி மேட்டூரில் ரூ.28.08 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் கட்டட திறப்பு விழாவில் தரணிவேந்தன் எம்.பி., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் சரவணக்குமார், சிவக்குமார், கலந்து கொண்டனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுவனுார் கிராமத்தில் 28.15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடப் பட்ட பள்ளி கட்டடத்தை முதல்வர் காணொலி மூலம் திறத்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்திவேல், பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி ஆகியோர் வரவேற்றனர்.நிகழ்ச்சியில் பி.டி.ஓ., ரவி பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைமை பொறியாளர் ராஜா, வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ