உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டுறவு சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம்: நாளை ஏற்பாடு

கூட்டுறவு சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம்: நாளை ஏற்பாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நாளை நடக்கிறது. விழுப்புரம் கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக சட்டசபையில் இந்தாண்டிற்கான கூட்டுறவு மானிய கோரிக்கையில், கூட்டுறவு துறை அமைச்சர், கூட்டுறவு துறையில் வசூலாகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்கள் மற்றும் இதர நீண்டகால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளார்.இதை செயல்படுத்தும் வகையில், நாளை (2ம் தேதி) விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடக்கவுள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன. கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் கடன் பெற்று நீண்ட காலமாக கடன் நிலுவையில் உள்ள கடன்தாரர்கள் இந்த முகாம்களில் பங்கேற்று ஒப்பந்தம் செய்து அரசு சலுகையை பெற்று பயன்பெற வேண்டும் என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !