உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனைத்து துறை வளர்ச்சி பணிகள்; கலெக்டர் ஒருங்கிணைப்பு கூட்டம்

அனைத்து துறை வளர்ச்சி பணிகள்; கலெக்டர் ஒருங்கிணைப்பு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து துறைகளின் வளர்ச்சி பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றப்பணிகளின் விவரம் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து கலெக்டர் விசாரித்தார்.தொடர்ந்து, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் பிரிவு, தீயணைப்பு துறை, சிட்கோ, சுகாதார துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின் துறை அரசு மருத்துவ கல்லூரி, வனத்துறை உள்ளிட்ட துறைகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் திட்டங்கள் நிலுவைக்கான காரணங்கள் குறித்து, அந்தந்த துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலுவையில் உள்ள அனைத்து திட்டப்பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !