| ADDED : நவ 27, 2025 04:53 AM
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசியதாவது; மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதற்காக 1970 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். வாக்காளர்கள் தங்களின் படிவங்களை சரியாக பூர்த்தி செய்ய ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உதவுவார்கள். பூர்த்தி செய்த படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மூலம் திரும்ப பெற உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். வாக்காளர் முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் குறித்த விவரத்தை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஓட்டுச்சாவடி முகவர்கள் கொடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.