உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.2.5 கோடியில் சிறுவர் பூங்கா விழுப்புரத்தில் கலெக்டர் ஆய்வு

ரூ.2.5 கோடியில் சிறுவர் பூங்கா விழுப்புரத்தில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபயிற்சி பூங்காவில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.பூங்காவை மேம்படுத்தும் வகையில் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர்கள் விளையாடும் வகையில், விளையாட்டு உபகரணங்களோடு கூடிய சிறுவர் பூங்கா, நீரூற்று, இறகு பந்து, சருக்கு விளையாட்டு, பேட் மிண்டன் விளையாட்டுகளுக்கான மைதானங்களும், தியான அறை, இளைஞர்கள், வயதானோர் உடல் திறனை பாதுகாக்க நவீன உடற்பயிற்சி கூடம், சிற்றுண்டி உணவகம், நவீன கழிப்பறை வசதி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகளை நேற்று ஆய்வு செய்த கலெக்டர் பழனி, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நகராட்சி கமிஷனர் ரமேஷ் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை