உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இருளர்களுக்கான வீடு கட்டும் பணி மரக்காணத்தில் கலெக்டர் ஆய்வு 

இருளர்களுக்கான வீடு கட்டும் பணி மரக்காணத்தில் கலெக்டர் ஆய்வு 

விழுப்புரம் : மரக்காணம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இருளர் மக்களுக்கான வீடுகள் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.மரக்காணம் அடுத்த கட்டளை ஊராட்சியில், பிரதம மந்திரியின் ஜன்மன் திட்டத்தின் கீழ் இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 'கட்டளை ஊராட்சியில் தலா 5.07 லட்சம் ரூபாய் வீதம், 29 இருளர் மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஜக்காம்பேட்டை, பேரணி, செண்டியம்பாக்கம், செண்டூர், ஆத்துார், பாலப்பட்டு பகுதி இருளர் மக்களுக்காக, வீடுகள் கட்டப்படுகிறது. வீடுகள், அரசு வழிகாட்டுதலின்படி கட்டப்பட வேண்டும். கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகள் வசம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.மரக்காணம் பி.டி.ஓ., சிலம்புச்செல்வன், ஸ்ரீதர், உதவி பொறியாளர் செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை