மேலும் செய்திகள்
அரசு கலைக்கல்லுாரிகளில் 27 வரை விண்ணப்பிக்கலாம்
17-May-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் அரசு கலைக் கல்லுாரி செயல்பட உள்ள தற்காலிக இடத்தையும், கல்லுாரி அமையவுள்ள இடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி தொகுதி அன்னியூரில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என சட்டசபையில் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். அதன் பேரில், அன்னியூரில் அரசு கல்லுாரி செயல்பட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.இதையடுத்து நேற்று முன்தினம் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் அன்னியூரில் இந்த கல்வியாண்டு முதல் கல்லுாரி செயல்பட உள்ள அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளிகளிலும், நிரந்தரமாக அமையவுள்ள காலி நிலத்தையும் ஆய்வு செய்தார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஆர்.டி.ஓ., முருகேசன், டி.இ.ஓ., சேகர், நேர்முக உதவியாளர் பெருமாள், பி.டி.ஓ., சிவனேசன், பொறியாளர் ரஹீம், மாவட்ட கவுன்சிலர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா, முருகன், தலைமை ஆசிரியர் சேகர், கல்வி மேலாண்மைக் குழு அரிபுத்திரி, கோவிந்தராஜ், சுந்தர், தேவராஜ், கலியபெருமாள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
17-May-2025