உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் பயிற்சி

வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் பயிற்சி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில், காரைக்கால் ஜவகர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் விவசாய அனுபவ பயிற்சியில் ஈடுபட்டனர்.பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் கங்கா கவுரி பங்கேற்று வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார். கல்லுாரி மாணவர்கள்பயிறு பூஸ்டர், மண்புழு உரம், அசோலா உர உற்பத்தி, லேயரிங் ஒட்டுதல் ஆகிய தொழில் நுட்பங்கள் குறித்து செயல் விளக்கமளித்தனர். வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ராஜா, உதவி வேளாண் அலுவலர் பெனாசீர் பானு, உதவி தோட்டக் கலை அலுவலர் சூர்யா, ஊராட்சி தலைவர் வீரப்பன், இயற்கை விவசாயி நாகப்பன் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை