உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவர் தற்கொலை

கல்லுாரி மாணவர் தற்கொலை

திண்டிவனம் : தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்த கல்லுாரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம், திருவள்ளுவர் நகர், தாழம்பு தெருவில் வசித்தவர் வெங்கடேசன். இவரது மனைவி நித்தியாதேவி. இவர்களது மகன் ராஜ்குமார், 19; இவர், திருக்கோவிலுாரில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி.,முதலாம் ஆண்டு படித்து வந்தார். ராஜ்குமாரின் தாயார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், அவர் திருவள்ளுவர் நகரிலுள்ள தாத்தா பழனி வீட்டில் தங்கி கல்லுாரிக்கு சென்றுவந்தார். மேலும், அதே பகுதி தனியார் நிதி நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்து வந்தார். இந்நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் தனியாக இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ