மேலும் செய்திகள்
மாணவி மாயம் : போலீஸ் விசாரணை
07-Sep-2025
விழுப்புரம் : கல்லுாரி சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அனந்தபுரம் அருகே மேல்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி மகள் சுகன்யா,19; இவர், செஞ்சியில் உள்ள தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி வீட்டில் கல்லுாரி செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து செல்வமணி அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
07-Sep-2025