உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சமுதாயகூட கட்டடம் பூமி பூஜை விழா

சமுதாயகூட கட்டடம் பூமி பூஜை விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் 4 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் கக்கன் நகரில் 1 கோடியே 50 லட்சம் லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம், 2 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை வடிகால் வசதி. வ.ஊ.சி நகரில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலை பணிகள் என 4 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் ேஷக் லத்தீப் வரவேற்றார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்து பேசினார். பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மாவட்டஅணி தலைவர்கள் பாபு ஜீவானந்தம், அரிகரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், திட்டக்குழு உறுப்பினர் முருகன், வார்டு கவுன்சிலர்கள் வீரவேல், ரமேஷ், கனகா, ஆனந்தி, ரேவதி, சுதா, வெண்ணிலா, சுபா, நகர செயலாளர் நைனாமுகமது, துணைச் செயலாளர் பிரசாத், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர்கள் சிவா, செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் சைபுல்லா, அசோக், சுதாகர், பாலகிருஷ்ணன், வி.சி., நகர செயலாளர் சந்துரு, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம், ஒப்பந்ததாரர்கள் சுரேஷ், செங்குட்டுவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை