உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்துறையில் காலி பணியிடம் நிரப்ப மாநாட்டில் வலியுறுத்தல்

மின்துறையில் காலி பணியிடம் நிரப்ப மாநாட்டில் வலியுறுத்தல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 17வது திட்ட மாநாடு நடந்தது.விழுப்புரம் மா.கம்யூ., அலுவலகத்தில் நடந்த மாநாட்டிற்கு மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். திட்ட சிறப்பு தலைவர் சிவசங்கரன் செங்கொடியேற்றினார். இணைச் செயலாளர் கண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கன்னியப்பன் வரவேற்றார். துணை பொது செயலாளர் பழனிவேல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.திட்ட செயலாளர் சேகர், வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் அருள் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி, தலைவர் முத்துக்குமரன், பொருளாளர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பு புருஷோத்தமன், ஐயப்பன் வாழ்த்தி பேசினர்.மாநில துணை பொது செயலாளர் பீர்முகமதுஷா, கோட்ட செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டில், மின்துறையை பொது துறையாக பாதுகாத்திட வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், 62 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை