உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு: 502 பேர் செலக்ட்

காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வு: 502 பேர் செலக்ட்

விழுப்புரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் காவலர்கள் பணியில் தேர்வாகியோருக்கு ஆயுதப்படை மைதானத்தில் நடந்த உடல் தகுதி, உடல் திறன் தேர்வில் 502 பேர் தேர்வாகினர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை), 2ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் என 3,359 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்தது.இதில், தேர்ச்சியடைந்த 827 பேருக்கு விழுப்புரம் காகுப்பம், ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 5ம் தேதி முதல் உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் நடந்தது.இதில், நேற்று நடந்த கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடந்தது. இறுதிக்கட்டமாக உடல் தகுதி மற்றும், உடல் திறன் தேர்வில் 502 பேர் தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை