உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம்

ஊராட்சி தலைவர், கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம்

செஞ்சி : தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமின் பயன்பாடு மற்றும் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்து கூறி மக்களை முகாமில் பங்கேற்க செய்ய ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஆலோசனை கூட்டம் செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, வட்டார மருத்துவ அலுவலர் யோகப் பிரியா முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., விளக்க உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர் பச்சையப்பன், வட்டார மருத்துவர்கள் பிரதிபா, முகிலன், பி.டி.ஓ., பிரபாசங்கர், துணை பி.டி. ஓ.,க்கள் சசிகலா, காஞ்சனா, அபிராமி, சுரேஷ், ராமதாஸ், கங்காதரன், சுகாதார ஆய்வாளர் முரளி மற்றும் செஞ்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை