மேலும் செய்திகள்
மின் டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பி திருட்டு
22-Jul-2025
கோட்டக்குப்பம்: டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வானுார் அருகே, ராயப்புதுப்பாக்கத்தில் இருந்து ராயஒட்டை ஏரிக்கரை ஓரம் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. கடந்த 28 ம் தேதி நள்ளிரவு அந்த டிரான்ஸ்பார்மரை ஆப் செய்த மர்ம நபர்கள், அதிலிருந்த பெட்டியை உடைத்து, உள்ளே இருந்த காப்பர் காயில் கம்பிகளை திருடிச்சென்றனர். தகவலறிந்த மின்வாரிய உதவி பொறியாளர் தமிழ்செல்வி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். டிரான்ஸ்பார்மரில் இருந்த பல கிலோ காப்பர் கம்பிகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
22-Jul-2025