மேலும் செய்திகள்
ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி
04-Nov-2024
திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற முயன்ற கணவன், மனைவி குழந்தையோடு கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் ரயில் நிலையத்தில் நேற்றிரவு 7.17 மணிக்கு, சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றாம் எண் பிளாட்பாரத்தில் வந்தது. திருவண்ணாமலை மாவட்டம் வென்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்,30; இவர் மனைவி கோமதி,23; ஆகியோர் 8 மாத குழந்தை கிருத்திகாவோடு பஸ் நிலையத்திலிருந்து, இந்த ரயிலில் ஏற வேகமாக ஓடி வந்தனர். வழக்கம்போல, 2 நிமிடம் திருச்செந்தூர் ரயில் நின்று, 7.19க்கு புறப்பட்டது. ரயில் நகர்ந்த போது, அவசர அவசரமாக இன்ஜின் அருகேவுள்ள பெட்டியில் ஏற முயன்ற போது, கணவன், மனைவி குழந்தையோடு தவறி ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்திற்கு இடையே உள்ள பகுதியில் விழுந்தனர். இதைப் பார்த்து சக பயணிகள் கூச்சலிட்டதால், இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.பின், கீழே விழுந்த மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரயிலை சிறிது நேரம் நிறுத்தி எடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது என ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதையறிந்து அங்கு வந்த ரயில்வே போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
04-Nov-2024